மறைந்த பாடகி வாணி ஜெயராம்க்கு சட்டப்பேரவையில் மரியாதை.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி 9ம் தேதி இந்த 2023 ஆம் வருடத்திற்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் ஆர் என் ரவியுடன் உரையுடன் துவங்கியது. இந்த பேரவை கூட்டம் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்தது. 

இந்த நிலையில் சில நாட்கள் மட்டுமே நடந்த இந்த சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இத்தகைய நிலையில், இந்த ஆட்சியில் மூன்றாவது முறையாக கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூடியது. அப்போது காலை 10 மணிக்கு பேசிய சபாநாயகர் அப்பாவு திருக்குறள் கூறி சட்டசபையை துவங்கி வைத்தார்.

அதன் பின்னர் நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த மூன்று நாட்களாக சட்டப்பேரவை நடைபெற்று வருகின்றது. 

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை துவங்கிய நிலையில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களான தங்கவேலு மற்றும் மாரிமுத்து ஆகியோருக்கு இரங்கல் வாசிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mourning For Vani jayaram In assembly


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->