மக்கள் அரசிடம் பிச்சையெடுக்கிறார்கள் - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
MP BJP Minister Controversy Speech Congress Condemn
மத்திய பிரதேச பாஜக அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், மக்கள் அரசிடம் பிச்சையெடுக்கிறார்கள் என பேசியது கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில், வீராங்கனை ராணி அவந்திபாய் லோதி சிலை திறப்பு விழாவில், பஞ்சாயத்து மற்றும் ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் காலத்துக்கு கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய பிரஹலாத் சிங் படேல், "மக்கள் அரசிடம் இருந்து உதவிகளை எதிர்பார்ப்பதை பிச்சையெடுக்கும் பழக்கமாக மாற்றிக்கொண்டுள்ளனர். பொதுவாக, அரசியல் தலைவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, அவர்கள் கையில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்படுவதைப் பார்க்கிறோம். இது சரியான நடைமுறை அல்ல" என்று பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
மேலும், தயவுசெய்து பெறுவதற்குப் பதிலாக, பிறருக்கு வழங்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இலவசங்களை எதிர்பார்ப்பது வீரத்திற்கான அடையாளம் அல்ல. வலுவான சமூகத்திற்காக, மக்களே முயற்சி செய்ய வேண்டும்" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரஹலாத் சிங் படேலுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து விடுத்துள்ள செய்தியில், "அமைச்சரின் பேச்சு மக்களை அவமதிக்கிறது. மக்களை பிச்சைக்காரர்கள் என குற்றம்சாட்டுவது மிகவும் வெட்கக்கேடானது. வறுமையில் வாழும் மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் இத்தகைய கருத்துகள் வெளியிடப்படுவது மோசமானது"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
MP BJP Minister Controversy Speech Congress Condemn