அயோத்தியில் அமைய உள்ளது 'கோவில்களின் அருங்காட்சியகம்..' - உ. பி. அரசு அறிவிப்பு..!
Museum Of Temples Will Be Set In U P
உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கோவில்களின் அருகாட்சியகத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் குறித்து கடந்த ஆண்டு உ. பி. அரசு அறிவித்து இருந்தது. கடந்த ஆண்டு முதல் தொடர்ந்த பேச்சு வார்த்தையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்காக டாடா சன்ஸ் நிறுவனம் ரூ. 650 கோடி செலவழித்து கோவில்களின் அருங்காட்சியகத்தை அயோத்தியில் அமைக்க உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் இதற்கான இடத்தை உத்திரபிரதேச அரசின் சுற்றுலாத் துறை டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க உள்ளது.
மேலும் இந்த நிலத்தை 90 ஆண்டுகள் குத்தகைக்கு டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு தருவதாக தெரிய வந்துள்ளது. மேலும் 90 ஆண்டுகால குத்தகைக்கு ஈடாக ரூ. 1 வசூலிக்கப் பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தனது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து செலவு செய்து அருங்காட்சியம் அமைக்க உள்ள டாடா சன்ஸ் நிறுவனம், இந்த அருங்காட்சியகம் இந்தியா முழுக்க உள்ள வரலாற்று சிறப்புமிக்க, புகழ்பெற்ற கோவில்களின் கட்டமைப்புத் திறன்களை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல், உத்திரபிரதேச மாநிலத்தின் ரூ. 100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டம் ஒன்றும் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உ. பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை சந்தித்து அயோத்தியில் கோவில்களின் அருங்காட்சியகம் அமைப்பதற்கான திட்ட விவரங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
English Summary
Museum Of Temples Will Be Set In U P