கொந்தளித்த முத்தரசன்!....தமிழக மக்களையும் அவமானப்படுத்திய நிதியமைச்சர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்! - Seithipunal
Seithipunal


கோவை கொடிசியாவில்  தொழில் முனைவோர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவக நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. ஆனால் காரத்திற்கு 12 சதவீதம் இருக்கும் நிலையில், இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்று கூறினார். 

மேலும்  Bun-க்கு  ஜி.எ.ஸ்.டி இல்லாத நிலையில், அதற்கு உள் வைக்கும் க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி உள்ளது. இந்த நிலையில், க்ரீமை கொண்டு வா நானே வச்சிக்கிறேன் என்று வாடிக்கையாளர் கூறியதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் கடை நடத்த முடியல மேடம் என்றும், ஒரே மாதிரி வையுங்கள் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அவரது ஆதரவாளர்கள், அதிகார வர்க்கத்தினர் அன்னபூர்ணா உணவக உரிமையாளரை தனியாக, நிதி மந்திரி தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

மத்திய நிதி மந்திரியின் கலந்தாலோசணைக் கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? அங்கு நியாயமான கோரிக்கையை எளிய முறையில் விளக்கி முறையிட்டது குற்றமா?  தவறான வரி விதிப்பை திருத்தியமைக்க முன் வராமல், முறையிட்டவரை தனித்து அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது அதிகார ஆணவத்தின் உச்சமாகும்.

சாதாரண உணவக உரிமையாளரை மிரட்டி மன்னிப்புக் கேட்க வைத்ததை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமானப்படுத்திய மத்திய நிதி மந்திரி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mutharasan who was upset Finance Minister who humiliated the people of Tamil Nadu should apologize publicly


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->