மாயமான எம்பி சடலமாக மீட்பு! அதிரும் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலத்தில் மாயமான பங்களாதேஷ் நாட்டின் எம்பி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகருக்கு எம்பி அன்வருல் அசீம் வந்துள்ளார்.

அங்கு அவருக்கு ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில்,  14 ஆம் தேதிக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியாததும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து காணாமல் போன அன்வருல் அசீம்ன் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து, சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசீம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வங்கதேச எம்பி அசிம்  கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் வங்கதேச தலைநகர் தாக்காவில் உள்ள ஒருவரை பிடித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அரசியல் ரீதியாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? அல்லது முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious death Bangladesh MP Anwarul Azeem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->