சீமானுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! பெரியார் பெயரை சொல்லி மேலும் ஒரு முக்கிய நிர்வாகி!
naam tamilar katchi Seeman Paventhan
நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த பாவேந்தன், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலும், 2021 சட்டசபைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவரான இவர், கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டில் ஏமாற்றம் அடைந்ததாக கூறுகிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பெரியாரை விமர்சிப்பது பாஜகவுக்கு ஆதரவாக முடிந்துவிடும். கட்சியின் கொள்கைக்கு முரணாக சீமான் தொடர்ந்து பேசுகிறார்.
பெரியாரை தமிழ் தேசியத்துக்கு எதிராக நிறுத்துவது கட்சிக்கு பேரழிவாக அமையும். சீமான், நாம் தமிழர் கட்சியை வீழ்ச்சிப்பாதைக்கு இழுத்துச் செல்கிறார்.
பெரியாரும் பிரபாகரனும் நேரடியாக மோதுபவர்களாக சித்தரிக்கப்படுவது சங்பரிவாரத்துக்கு விருந்தாக அமையும். சீமான் மேற்கொண்டு வரும் அணுகுமுறைகள் ஏற்க முடியாதவை என்பதால், கட்சியில் தொடர முடியாது என கடுமையான குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்..
நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் கட்சியைவிட்டு விலகிய நிலையில், தற்போது பாவேந்தனும் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
English Summary
naam tamilar katchi Seeman Paventhan