' நான் ஒருத்தன் தான் கட்சிக்காரங்கள மணல் அள்ளவுட்டேன்.' - திமுக எம்.பி சர்ச்சை வீடீயோ.!  - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே திமுகவின் முன்னணி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. இது குறித்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார். 

இத்தகைய நிலையில், திமுக எம்பி ராஜேஷ் குமார் மணல் அள்ள திமுகவினருக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ளேன் என்று பேசி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நாமக்கல் மாவட்ட திமுக கிழக்குச் செயலாளராக கே.என்.ஆர் ராஜேஷ்குமார் இருக்கிறார். இவர் மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் தனது கட்சியினரிடம் பேசும் வீடியோவில், "எம்.எல்.ஏ கே.பி ராமசாமியை கூட மணலல்ல விடாமல் நிறுத்திவிட்டேன். எந்த ஒரு மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர் தனது கட்சிக்காரர்களை மணல் எடுக்க அனுமதிப்பது இல்லை. 

டெண்டரை நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டு பணம் வாங்கிக் கொள்கின்றனர். நான் ஒருத்தன் தான் நம் கட்சிக்காரர்கள் முன்னேற வேண்டும் என்று மணல் எடுக்க விடுகிறேன்." என்று பெருமையாக பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Namakkal district Secretery DMK MP rajesh kumar video makes shock 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->