தி.மு.க.வுக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டனர்..ஆர்.பி. உதயகுமார் சாடல்!
People are ready to put an end to DMK. R.P. Udayakumar!
தி.மு.க அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகிறார்கள் என்றும் அதை திசை திருப்பும் வேலையாக சட்ட மன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோத னையாக இதை பார்க்க முடிகிறது என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-கோவை வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது முழுக்க முழுக்க தி.மு.க.வின் அரசியல் பழி வாங்குதல் நடவடிக்கை ஆகும் என கூறினார். மேலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் இதுகுறித்து தெளிவான அறிக்கை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கிறார் என பேசினார்.
மேலும் பேசிய உதயகுமார் ,தமிழக அரசு செயல்படாமல் முடங்கி கிடக்கிறது என்றும் இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் கடமையை அ.தி.மு.க களத்தில் நின்று எடுத்து சென்று மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது என கூறினார்.
மேலும் தி.மு.க அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகி றார்கள் என்றும் அதை திசை திருப்பும் வேலையாக சட்ட மன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோத னையாக இதை பார்க்க முடிகிறது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் அ.தி.மு.க. அரசு 52 ஆண்டு களாக கடந்து வந்திருக்கிறது என்றும் இதுபோன்று பழி வாங்கும் நடவடிக்கைகளால், அ.தி.மு.க. இயக்கத்தையும் இயக்கத் தொண்டர்க ளையும் இயக்கத்தின் செயல்பாடுகளையும் முடக்கி விடலாம் என்று தி.மு.க நினைத்தால் அது சர்வாதிகார போக்காகும் என்றும் அது நடக்காது. தி.மு.க அரசுக்கு இது ஒரு நிறைவு காலமும், ஒரு முடிவு கால மாகும் என .இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
People are ready to put an end to DMK. R.P. Udayakumar!