நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் - பயணிகளின் நிலை என்ன?
15 peoples injured bus accident in dindukkal
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 15 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கலில் இருந்து நிலக்கோட்டை நோக்கிச் பேருந்து ஒன்றுச் சென்றது. இதேபோல் வத்தலகுண்டுவில் இருந்து சின்னாளப்பட்டி நோக்கி பேருந்து ஒன்று சென்றது. இந்த இரண்டு பேருந்தும் சின்னாளப்பட்டி அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த 15 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நேருக்கு நேர் மோதி பதினைந்து பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
15 peoples injured bus accident in dindukkal