காரைக்கால் அரசுமருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை..அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் ஆலோசனை! - Seithipunal
Seithipunal


காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்த கூட்டத்தில்  துணைநிலை ஆளுநர்கைலாசநாதன்  மருத்துவமனையின் செயல்பாட்டை மேம்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஆளுநர் மாளிகையில்  நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவமைனையின் செயல்பாடுகள், உள்கட்டமைப்பு, மருத்துவப் பணியாளர் விவரங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து காணொளி காட்சி மூலம் அதிகாரிகள் விளக்கினர். விவரங்களைக் கேட்டறிந்த துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மருத்துவமனையின் செயல்பாட்டை மேம்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

• காரைக்கால் மருத்துவமனைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டடு, “சர்வீஸ் பிலேஸ்மென்ட்“ சேவை அடிப்படையில் புதுச்சேரியில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை உடனடியாக காரைக்காலுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

• செண்டாக் நிதியுதவி பெற்று முதுநிலை மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள், படிப்பு முடிந்தபின் ஒரு ஆண்டு காலம் அரசு மருத்துவமனைகளில் சேவையாற்ற ஒப்பந்தம் செய்ய வேண்டும்.  அதன் பிறகு அவர்கள ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கலாம்.

மத்திய அரசின் திட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்படும் தீவிர சிகிச்சை பிரிவு, ஆயுஷ் மருத்துவமனை மற்றும் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றுக்கான திட்ட வரைவு மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும்.

• பொதுமக்களுக்கான உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனையுடன் இணைந்து செயல்படலாம்.

• மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை பெரு நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் மேம்படுத்தலாம்.

• பொதுமக்களுக்கான மருத்துவச் சேவையில் பாதிப்பு ஏற்படாத வகையில் மருத்துவ உபகரணங்கள் பாராமரிப்பு ஒப்பந்தம் (ஏ.எம்.சி) செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• வரும் மழை காலத்திற்குள் கட்டிட கூரை, சுவர்கள், கழிவறை ஒழுகல்களை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு மருத்துவ சேவையின் தரம் குறித்த நம்பிக்கை ஏற்படும் விதமாக அதன் தரத்தை உயர்த்த வேண்டும்.கூட்டத்தில், துணைநிலை ஆளுநரின் செயலர் மணிகண்டன், சுகாதாரத்துறைச் செயலர் ஜெயந்த குமார் ரே, முன்னாள் சுகாதாரத்துறைச் செயலர் முத்தம்மா, சுகாதாரத்துறை, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் ல் செவ்வேள், காரைக்கால் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர்  கண்ணகி மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Steps taken to upgrade Karaikal Government Hospital Lieutenant Governor interacts with officials


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->