தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் பிரச்சாரம்.!! எங்கே, எப்போது தெரியுமா.? - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அப்புறம் ஏப்ரல் 9ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து வாகன பேரணியில் ஈடுபடுகிறார்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 9ம் தேதி மாலை 6 மணிக்கு தென் சன்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து வாகன பேரணியில் ஈடுபடுகிறார். பிறகு ஏப்ரல் 10ம் தேதி நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து வாகன பேரணியில் ஈடுபடும் நரேந்திர மோடி அதன் முடிவாக நாளை 11 மணியளவில் கோயம்புத்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். 

அதன் பிறகு கேரளா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி காலை 11 மணியளவில் பெரம்பலூரில் நடைபெறும் பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஏப்ரல் 14ஆம் தேதி விருதுநகரில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மேற்கண்ட வேலூர், தென் சென்னை, நீலகிரி, கோயம்புத்தூர், பெரம்பலூர், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி தனி கவனம் செலுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi 4days campaign in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->