இதை பண்ணீங்கன்னா சும்மா இருக்க மாட்டோம் - சரத்பவார் எச்சரிக்கை.!
Nationalist Congress Party leader Sharad Pawar has warned that if anybody try to break our party the consequences will be dire
தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க நினைப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சரத் பவார் தெரிவித்திருக்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி மகா விகாஸ் மகாதி கூட்டணியில் உள்ளது. இந்தக் கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் உள்ளன. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியுடன் இனிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் சின்டே உட்பட 16 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மகராஷ்டிரா மாநிலத்தின் துணை சபாநாயகர் 16 எம். எல். ஏக்களை தகுதி நீக்கம் செய்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜகவிற்கு எதிராக வந்தால் அவர்களது ஆட்சி கவிழும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைய திட்டமிடுவதாகவும் அதன் மூலம் முதல்வர் பதவியை குறி வைப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சரத் பவார் அது வேண்டுமானால் அவர்களின் திட்டமாக இருக்கலாம் ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க நினைத்தால் அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.
English Summary
Nationalist Congress Party leader Sharad Pawar has warned that if anybody try to break our party the consequences will be dire