கேரளாவில் பெரும் பரபரப்பு! 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ! நடந்தது என்ன?
Huge excitement in Kerala A female MLA who fell from a 15 feet high platform
கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் நடந்த கின்னஸ் சாதனை பரத நாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற இருக்கையில், திருக்காட்கரை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சி நகரின் ஜவஹர்லால் நேரு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12,000-க்கும் மேற்பட்ட பரத நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உமா தாமஸ், விஐபிக்களுக்காக 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தார்.
உமா தாமஸ், அங்கிருந்த ஆதரவாளர்களை நோக்கி கையசைக்க முயன்றபோது, மையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத காரணமாக எதிர்பாராத விதமாக மேடையிலிருந்து தவறி விழுந்தார். இந்த விபத்தில் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதுடன், அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவல்படி,தலையில் காயம், மூளை மற்றும் நுரையீரலில் ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் மற்றும் அபாயத்தைக் கடந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.வென்டிலேட்டரை சில நாட்களுக்குப் பிறகு அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறைபாடு தொடர்பான விமர்சனங்கள்:விஐபிக்களுக்காக அமைக்கப்பட்ட மேடையில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படாதது குறித்து பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்பாட்டாளர்கள் மேடையின் முகப்பு மற்றும் பாதுகாப்பு முறைகளை சரியாக பரிசோதிக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.இதுதொடர்பாக பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உமா தாமஸின் இந்த விபத்து, நிகழ்ச்சிகள் மற்றும் பொது மேடைகளில் பாதுகாப்பு முறைகளின் அவசியத்தை மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இவ்விபத்தை அதிர்ச்சியுடன் கண்ட உமா தாமஸின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள், செயல்பாட்டில் உள்ள பொறுப்பின்மையை சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது, எம்எல்ஏ உமா தாமஸின் உடல்நிலை மேம்படும் எதிர்பார்ப்புடன் துரித சிகிச்சை தொடர்ந்து வருகிறது.
English Summary
Huge excitement in Kerala A female MLA who fell from a 15 feet high platform