அன்று 149வது.. இன்று 147வது.. "உளறி கொட்டிய அண்ணாமலை".. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை ஆதாரங்களுடன் இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார். அதேபோன்று தனது கையில் கட்டி இருந்த ரஃபேல் வாட்ச் ரசிதையும் என்று வெளியிடுவதாக கூறியிருந்தார். அந்த வகையில் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் இன்று திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.

அதேபோன்று தனது கடையில் கட்டி இருக்கும் ப்ரொபைல் வாட்ச் காண பில் என்று கூறி அதனையும் இன்று வெளியிட்டு இருந்தார். அப்பொழுது பேசிய அவர் "நான் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் இருந்த பொழுது இலஞ்ச பணத்தில் ரபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் பொய் பரப்புகின்றனர்.

ரஃபேல் வாட்ச் வரிசையில் 147 ஆவது வாட்சை நான் வாங்கினேன். எனக்கு இந்த வாட்ச்சை கொடுத்தது எனது நண்பர் தான். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நபர் ஒருவர் எனக்கு வழங்கிய அந்த ரபேல் வாட்ச் விலை 3 லட்சம் ரூபாய் மட்டுமே என தெரிவித்திருந்தார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனது கையில் இருந்த வாட்சை கழட்டி அதனை உற்றுப் பார்த்து இது ரஃபேல் வாட்ச் தயாரிப்பில் 149 ஆவது வாட்ச் என தெரிவித்திருந்தார். ஆனால் இன்று பொது மேடையில் 147 வது வாட்ச் என தெரிவித்துள்ளார். இதனால் அண்ணாமலை கூறிய ரஃபேல் வாட்ச் என்னில் முரண்பாடு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து இணையதள வாசிகள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Netizens asking correct number of Annamalai rafael watch number


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->