புத்தாண்டு எதிரொலி: "தமிழக அரசின் மதுபான கடை வாடிக்கையாளர்களுக்கு" மகிழ்ச்சி செய்தி.! - Seithipunal
Seithipunal


தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் தமிழக அரசால் நடத்தப்படும் மதுபான கடை யான டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் அமோகமாக நடைபெறும் (கவலைக்குரிய விஷயம் என்றாலும், இப்படி சொல்வதற்கு வருந்துகிறோம்). 

இதுபோன்ற விழாக்காலங்களில் தமிழக அரசு மதுபான வியாபாரத்தை பெருக்கும் நோக்கில், டாஸ்மார்க் கடைகளில் முன்னேற்பாடாக அதிகப்படியான மதுபானங்களை ஸ்டாக் வைத்துக்கொள்ளும். மேலும் பலதரப்பட்ட மதுபான வகைகளையும் விற்பனைக்கு கொண்டு வரும். 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவுக்கு மது வகைகளை ஸ்டாக் வைத்துக் கொள்ள வைத்துக்கொள்ளவும், குறைந்த விலையில் உள்ள மதுபானம், அதிக விலையில் உள்ள மதுபானங்களை தமிழக அரசின் மதுபான கடை வாடிக்கையாளர்களுக்கு குறையில்லாமல் கொடுப்பதற்கான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது.

வருகின்ற இந்தப் புத்தாண்டு மது விற்பனையை பொறுத்தவரை சுமார் 250 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையாகும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கணித்துள்ளது.

இதற்கிடையே, நாளை மறுநாள் நாளை இரவு பிறக்க உள்ள புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடற்கரைகளில் புத்தாண்டை கொண்டாட தடை விதித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டிச் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என்று  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Year celebration tasmac


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->