அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டிலிருந்து ஊழலை துடைத்தெறிந்துவிடுவேன் - பிரதமர் மோடி!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநிலம் சிசாய் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து உரையாற்றினார்.

பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட  ஜார்க்கண்ட் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்க்கு இந்தியா கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்த இணைய வசதி இப்போது கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கும் கிடைக்கிறது.

வாக்கு வங்கியே தக்க வைக்க காங்கிரஸ் கட்சி மாவோயிஸ்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிலிருந்து ஊழலை துடைத்தெரிவதாக நான் உறுதிமொழி எடுத்துள்ளேன். அது மட்டுமில்லாமல் உழல்வாதிகள் அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next 5 years I will wipe out corruption PM Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->