‘நான் இன்னும் இறக்கவில்லை... சமாதியில் தான் இருக்கிறேன்’ முற்றுப்புள்ளி வைக்க நினைவதர்களுக்கு புள்ளிவைத்த நித்யானந்தா.! - Seithipunal
Seithipunal


கடத்தல், பாலியல் உள்ளிட்ட புகாரில் சிக்கிய நித்யானந்தா சாமியார் எந்த நாட்டில் இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாமல் தேடி வருகின்றனர்.

ஆனால், கைலாஷா என்ற நாட்டில் இருப்பதாக கூறி, அடிக்கடி வீடியோ வெளியிட்டுவரும் நித்யானந்தா, சில நாட்களாக அவரது வீடியோக்கள் வெளியாகவில்லை. இதன் காரணமாக சிலர் சமூக வலைதளங்களில் நித்யானந்தா மரண படுக்கையில் உள்ளார் என்று வதந்தியை கிளப்பிவிட்டனர்.

இந்நிலையில், நித்யானந்தா சமூக வலைதளம் மூலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு, 'நான் இறந்து விட்டதாக பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த பதிவில், "என்னை பற்றி ஹேக்கர்கள் நான் இறந்து விட்டதாக பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை என்று என் சீடர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என்னால் பேசவோ அல்லது சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி வருவதற்கு இன்னும் நேரம் எடுக்கும்.

27 மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. மருத்துவர்கள் என்பதைவிட என் பக்தர்கள் & ஆராய்ச்சியாளர் போன்றவர்கள்.

எனக்கு அறிமுகமானவர்களை கூட அடையாளம் கண்டுகொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. சமாதி மனநிலையை அடைந்து இருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்.

எனது இதயம் 18 வயது வாலிபரின் இதயம் போன்று துடிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நித்ய பூஜைக்காக நான் சமாதியில் இருந்து வரும்போது மட்டும் சில சமயங்களில் உங்கள் கருத்துக்களை பார்த்து என் பதிலை தருகிறேன்" என்று நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithiyanda say i am not dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->