ஜோதிகா வருத்தம்!!! ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறது மீடியாத்துறை..! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை ஜோதிகா, தனது அடுத்த படமான `டப்பா கார்டல்' என்ற நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார்.   இந்த வெப் தொடரில் இவருடன் மலையாள நடிகை நிமிஷா சஜயன், ஷபானா ஆஸ்மி, ஷாலினி பாண்டெ, அஞ்சலி ஆனந்த் மற்றூம் கஜராஜ் ராவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

மேலும் இத்தொடரை ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ளார். இந்த வெப் தொடர் அண்மையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அவரின் கணவனான சூர்யாவை பற்றி பேசியுள்ளார்.  அதில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது.

நடிகை ஜோதிகா:

இதுக்குறித்து அவர் பேசியதாவது ," நான் பல மோசமான திரைப்படங்களை பார்த்துள்ளேன் ஆனால் அந்த திரைப்படங்கள் பாக் ஆபிஸில் நல்ல கலெக்ஷன் பெற்று ஹிட்டடித்துள்ளது.ஆனால் அந்த திரைப்படங்களுக்கு விமர்சனங்கள் அவ்வளவு மோசமாக எழவில்லை.

ஆனால் என் கணவன் திரைப்படம் நடித்து வெளிவரும் போது விமர்சகர்கள் மிகவும் மோசமான கருத்துகளை முன் வைக்கின்றனர். இது நியாயமற்றது. கங்குவா திரைப்படத்தில் சில பகுதிகள் சரியாக இல்லைத்தான் ஆனால் அவர்கள் அப்படத்திற்கான கடுமையான உழைப்பை செலுத்திருக்கிறார்கள்.

அப்படத்திற்கு பல ஆயிரம் பேர் வேலை செய்துள்ளனர்.சில மோசமான திரைப்படத்திற்கு கிடைக்காத எதிர்மறை விமர்சனங்கள் கங்குவா திரைப்படத்திற்கு கிடைத்தது என்னை அது பாதித்தது. மீடியா துறை இப்படி பாரபட்சமாக நடந்துக் கொள்வது வருத்தமளிக்கிறது." எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jyothika is sad The media is acting in a one sided manner


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->