டீசர் ரிலீஸ்!!! விரைவில் 'சக்தித் திருமகன்' - விஜய் ஆண்டனி...
Vijay Antony Shakthi Thirumagan Teaser release coming soon
பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலம் திரைச் சினிமாவுக்கு வந்தது அனைவரும் அறிந்தவை .இவரது நடிப்பில் உருவான 'பிச்சைக்காரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
மேலும் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் பெரியளவில் மக்களிடையே எதிர்பார்ப்பு வரவேற்பைப் பெறவில்லை.இதனிடையே விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாகவுள்ளது.

விஜய் ஆண்டனி:
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார்.இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பரப் பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன்பு அமேசான் மினி வெப் தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிக்கும் முதல் படமாக இப்படம் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இப்படத்திற்கு 'சக்தித் திருமகன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அருண் பிரபு இயக்கத்தில், இதற்கு முன்பு அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் டீசர் அப்டேட்டைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் வரும் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.அதில் விஜய் ஆண்டனி பண கட்டுகள் அடுக்கப்பட்ட குவியலின் மேல் உட்கார்ந்துள்ளார். இப்படம் எவ்விதக் கதைக்களத்தை கொண்டுள்ளது எனப் பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் விஜய் ஆண்டனிக்கு இது மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .
English Summary
Vijay Antony Shakthi Thirumagan Teaser release coming soon