எஸ்.வி.சேகருக்கு மாலை மரியாதை, பரிவட்டம்! வெட்கமாக இல்லையா? திமுக அமைச்சரை கடுமையாக விமர்சித்த இடும்பாவனம்!
NTK Idumbavanam karthi DMK MK Stalin
நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக எழுதிய வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் எஸ்.வி.சேகரை குற்றவாளி என அறிவித்து, ஒரு மாத சிறைத்தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்திருக்கின்றன.
அதேசமயம், மேல்முறையீட்டுக்காக தண்டனையை நிறுத்தி 3 மாத காலம் அவகாசம் வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். தன் மீதான தண்டனையை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் எஸ்.வி.சேகர்.
இந்நிலையில், முதலமைச்சரும், தமிழக அமைச்சர்களும் எஸ்.வி.சேகரோடு மேடையைப் பகிர்ந்துகொண்டு கூடிக் குலவுகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் பார்ப்பனர்களின் வாக்குகளைப் பெற அவரையே நம்பி இருக்கின்றனர்.
இப்படி இருந்தால், மேல்முறையீட்டில் எஸ்.வி.சேகருக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசுத்தரப்பு எப்படி வாதாடும்? வாக்குக்காக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கத் தயாராகிவிட்டது கேடுகெட்ட திமுக!
இதுல எஸ்.வி.சேகருக்கு மாலை மரியாதை, பரிவட்டம் வேறு! வெட்கமாக இல்லையா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
NTK Idumbavanam karthi DMK MK Stalin