ரூ.100-க்கு டேட்டாவுடன் 90 நாளுக்கு ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ - ஐபிஎல் காண ஜியோவின் சூப்பர் ஆஃபர்!
jio IPL Data Pach Jio Hot Star
ரிலையன்ஸ் ஜியோ, தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக புதிய மற்றும் குறைந்த செலவிலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ரூ.100-க்கு கிடைக்கும் இந்த புதிய திட்டத்தில், 90 நாட்களுக்கு ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ சந்தா மற்றும் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதி கிடையாது என்பதனால் இது ஒரு ‘டேட்டா ஒன்லி’ திட்டமாகும்.
இதன்மூலம், பயனர்கள் ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ மூலமாக திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை காண முடியும்.
இந்த புதிய திட்டம், வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் தொடரை பார்க்கும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்டம் குறைந்த செலவில் விரிவான ஓடிடி அனுபவத்தை வழங்குவதால், ஜியோவின் புதிய திட்டம் பலரை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (கடந்த மாதம் ஜியோ நிறுவனம், ‘ஜியோ சினிமா’ உடன் ‘ஹாட்ஸ்டார்’ சேவையை இணைத்தது குறிப்பிடத்தக்கது)
English Summary
jio IPL Data Pach Jio Hot Star