விஜயின் 'ஜன நாயகன்' படத்தில் இணைந்துள்ள 03 இயக்குனர்கள்..?
03 directors have joined Vijays film Jana Nayagan
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து 'தளபதி 69' எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தில் விஜயுடன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். ' இந்த படத்தில் அனிமல் மற்றும் கங்குவா' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய, பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை குடியரசு தினத்தை முன்னிட்டு 'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலானது. மேலும், போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவரது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல் காட்சி அமைந்துள்ள கட்சியை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துவரும் 'ஜன நாயகன்' படத்தில் பிரபல இயக்குநர்கள் நடிப்பதாகத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி இப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் வீடியோவை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இது விஜய்யின் கடைசி படமென்பதால் அவருக்கு நெருக்கமான இயக்குநர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் விஜய்யுடன் நடிக்க உள்ளதாக மற்றுமொரு சிறப்பு தகவலும் வெளியாகியுள்ளது.
English Summary
03 directors have joined Vijays film Jana Nayagan