அதிமுக vs திமுக.. வேட்பு மனு தாக்கலில்‌ போட்டி.. வெற்றி யாருக்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கலாநிதி வீராசாமியும் அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோவும் ஒரே நேரத்தில் ராயபுரம் மண்டல அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் தேர்தல் நடத்தும் அதிகாரி குழப்பம் அடைந்தார். 

இதனால் யாரிடம் முதலில் வேட்பு மனு பெறுவது என குழம்பிய நிலையில் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுக வேட்பாளருக்காக 2ம் எண் டோக்கனை திமுகவைச் சேர்ந்த நபர் ஒருவர் வாங்கி இருந்தார். ஆனால் முதல் டோக்கனை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ பெற்றிருந்தார். அதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரி டோக்கன் வரிசைப்படி வேட்பு மனுவை பெற வேண்டும் என அமைச்சர் சேகர்பாபுவிடம் வலுவர்த்தியும் அவர் இருக்கையில் இருந்து எழவில்லை. 

இதனால் முதலில் டோக்கன் வாங்கிய இயங்கலை நிற்க வைத்து அவர்களை உட்கார வைத்துள்ளீர்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதனை அடுத்து முதலில் வந்த அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி பெற்றுக் கொண்டதை அடுத்து திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி பெற்றுக்கொண்டார். 

இரு கட்சி நிர்வாகிகள் இடையே வேட்பு மனு தாக்கல் செய்வதில் வாக்குவாதம் ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nomination filing competition between AIADMK DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->