பெரியாரை விமர்சித்ததால் ஓட்டுக்கள் குறைவா..? நா.த.க., வேட்பாளர் பேட்டி..!
NTK candidate interview says that the votes did not decrease because he criticized Periyar
'பெரியாரை விமர்சித்ததால் ஓட்டுக்கள் குறையவில்லை' என்று நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமி கூறியதாவது:
![](https://img.seithipunal.com/media/seetha-m3j9j.jpg)
நாங்கள் வாங்கிய 24,151 ஓட்டுக்கள் தி.மு.க.,வை அச்சப்படுத்தியிருக்கிறது. மக்கள் பணிகளை செய்யாவிட்டால், மக்களிடம் தி.மு.க.,வால் ஓட்டு கேட்க முடியாது. கள்ள ஓட்டு போட்டு விட்டார்கள். நாம் தமிழர் கட்சியினர் டெபாசிட் வாங்கி விடுவர் என்பதால் தான் தி.மு.க.,வினர் சிக்கல் ஏற்படுத்தினர். நாம் தமிழர் கட்சியினரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று பதற்றத்தை ஏற்படுத்தி விட்டு, அந்த சமயத்தில் அதிக ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.
![](https://img.seithipunal.com/media/seethala-dbys7.jpg)
இது எல்லாம் திட்டமிட்டு செய்யும் அராஜகம், கொடுங்கோல் ஆட்சிக்கு உதாரணம். தேர்தல் பணி செய்ய வந்தவர்களை கூட அவர்கள் செய்ய முடியாத வேலையை செய்ய வைத்து நெருக்கடி கொடுத்துள்ளார்கள். போலீசாருக்கு தி.மு.க., தலைமையில் இருந்து நெருக்கடி கொடுத்தார்கள். சமரசம் இல்லாத சீமானின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, எனக் கூறியுள்ளார்.
அத்துடன், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈ.வெ.ராவை விமர்சித்ததால் ஓட்டுக்கள் குறையவில்லை. சீமான் ஏற்கனவே சொல்லி விட்டார். நாங்கள் சொல்லும் கருத்தை சரி, தவறு என்று புரிந்து கொண்டு ஓட்டு செலுத்தினாலே, அது எங்களுக்கு பெருமை. புரிதல் இல்லாமல் ஓட்டுப்போட வேண்டாம்,என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
NTK candidate interview says that the votes did not decrease because he criticized Periyar