ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியது இதுதான்.. சசிகலாவிற்கு விஸ்வாசம் காட்டிய ஓபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆஜரானார். இரு நாட்கள் சுமார் 9 மணி நேரம் ஓ பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் பல கேள்விகள் கேட்கப்பட்டது. 

இந்நிலையில், விசாரணை முடிந்த பின்பு ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் எதிர்தரப்பு கேள்விகளுக்கு உரிய பதில் அளித்துள்ளேன். ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட கேள்விக்கு உண்மையான பதில் அளித்துள்ளேன். 

ஆறுமுகசாமி ஆணையம் 7 தடவை எனக்கு சம்மன் அனுப்பியது. அதில் ஆறு முறை மட்டுமே கடிதம் வந்தது. இரண்டு முறை மட்டுமே ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டதால் காரணத்தை ஆணையத்தில் விளக்கினேன். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள. ஆணையத்தின் விசாரணை திருப்தியாக உள்ளது. முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை. 

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நாள் முதல் எக்மோர் கருவி அகற்றும் வரை ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மதிப்பும், மரியாதையும் உண்டு என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆறுமுகசாமி ஆணையத்தில் அனைத்து தரப்பு சாட்சியங்களை விசாரணை நிறைவு பெற்றது. விசாரணையில் அளித்த பதில்கள் சசிகலாவிற்கு எதிராக எந்தவித முரண்பாடு, பாதகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

o panneerselvam press meet about jayalalithaa death issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->