இதர பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு உரிமைகளை பறிக்க காங்கிரஸ் திட்டம்..உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு வரும் வேப்பிலை 26ம் தேதி நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இருப்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில ஈடுபட்டார். பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளார். 

லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், இதர பிற்பட்டபட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவீதம் இடஒதுக்கீட்டில் 6 சதவீதம் சிறுபான்மை சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துறைத்துள்ளது . காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உரிமையை பறிக்கும் வேலையில் காங்கிரஸ் ஈடுபடும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Obc reservation issue Congress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->