உடல்நலக்குறைவால் முன்னாள் முதலமைச்சர் காலமானார்.!! - Seithipunal
Seithipunal


ஒடிசா முன்னாள் முதலமைச்சர் ஹேமானந்தா பிஸ்வால் நேற்று  காலமானார்.

இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், ஒடிசாவின் முன்னாள் முதல் அமைச்சராகவும் இருந்தவர் ஹேமானந்தா பிஸ்வால். இவர்  சமூக விரோத வகுப்புவாத மற்றும் பிற ஆபத்தான செயல்பாடுகளை தடுப்பதற்கான தேர்வு குழு உறுப்பினர், மொழியியல் சிறுபான்மையினர் மீதான ஹவுஸ் கவுன்சில் கமிட்டி உறுப்பினர், நூலக குழு உறுப்பினர், கிராமப்புற வளர்ச்சிக்கான குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை திறன்பட செயல்பட்டவர். 

இவர் 1989 முதல் 1990 வரையிலும், மீண்டும் 1999 ஒன்பது முதல் 2000 வரையிலும் பதவியில் இருந்தார். 2009இல் சுந்தர்காரில் இருந்து மீண்டும் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசாவின் முதல் பழங்குடியின முதல்வரானார். 

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஹேமானந்தா பிஸ்வால் வயது முப்பு மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

odisha ex cm passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->