பிறழ் சாட்சியான 9வது நபர்.. நீர்த்துப் போகும் செம்மண் குவாரி வழக்கு.!!
One more witness turned in ponmudi sand mining case
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தனது பதவியை விழுந்துள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நீண்ட வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்ட அரசு அதிகாரிகள் பிறழ் சாட்சியாக மாறி வருகின்றனர்.
இதனால் செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தூசி தட்ட தொடங்கினார்.
இது ஆளும் திமுக தரப்புக்கு பின்னடைவை தந்தது. இந்நிலையில் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மேலும் ஒரு அரசு அதிகாரி பிறழ் சாட்சியாக மாறி உள்ளார். ஏற்கனவே 8 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில், இன்று மேலும் ஒருவர் பிறழ் சாட்சியாக மாறி இருப்பது வழக்கின் விசாரணையை நீர்த்துப்போகச் செய்துள்ளது.
English Summary
One more witness turned in ponmudi sand mining case