மத்திய அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து விசிக ரெயில் மறியல் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மக்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் வருகின்றனர். இந்த நிலையில், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் பெங்களூருவில் இருந்து சென்னை செல்லக்கூடிய லால்பாக் விரைவு ரெயிலை மறித்தும், தண்டவாளத்தில் படுத்தும் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதனால் போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதேபோல் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
அப்போது, அவர்கள் மன்னிப்பு கேள்... மன்னிப்பு கேள்... என்றும் அமைச்சரவையில் இருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck party strike for amitsha speech in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->