சூடு பிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்.. வலுவாகும் எதிர்க்கட்சிகள் கூட்டணி.. 18 தலைவர்கள் பங்கேற்பு.!
Opposition party discussion meeting 18 leaders participate
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் ஜூன் 12-ம் தேதி நடைபெற இருந்தது.
இதனிடையே ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மற்றும் திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. மேலும், ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தின் காரணமாகவும் இந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பீகார் மாநில தலைநகர் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற ஆலோசனை கூட்டங்களுக்கு கட்சியின் பிரதிநிதிகளை அனுப்பி வைக்காமல் கட்சியைத் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் பங்கேற்கோ உள்ளனர். இந்த தகவலை ஐக்கிய ஜனதா தல தேசிய தலைவர் ராஜு ரஞ்சன் சிங் நேற்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை கூட்டணி வலுசேர்கிறது. மேலும் இதுவரை 18 கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Opposition party discussion meeting 18 leaders participate