கர்நாடகாவில் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு.. சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சை கண்டித்து கர்நாடக சட்டமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கலந்து கொண்டார்.

கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்றும், இன்றும் முழுவதும் முடங்கின.

இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து கர்நாடக சட்டமன்றத்தில் அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சை கண்டித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கலந்து கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Opposition to Amit Shah in Karnataka Congress MLAs protest in Assembly


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->