வசமாக சிக்கிய ஓபிஎஸ் மகன் லண்டனில் இருந்து வந்த வீடியோ!
OPR ADMK OPS EPS ISSUE
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்டாவில் அதிமுகவின் முகமாக இருப்பவரும், எம்ஜிஆர் காலத்து எம்எல்ஏவுமான பாப்பா சுப்பிரமணியத்தின் மகன், லண்டன் வாழ் தமிழரான பாப்பா வெற்றி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு எதிராக சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
லண்டனில் இருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது, "வணக்கம் திரு ரவீந்திரநாத் அவர்களே., தொண்டர்கள் சார்பாக நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்க நினைக்கிறேன். நேற்று நீங்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தீர்கள். அதில், முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்தது தொகுதி நலன் கருதி தான் என்றும், தொகுதிக்காக சில கோரிக்கைகளை வைக்க சென்றேன் என்றும் தெரிவித்து உள்ளீர்கள்.
இதுவே மறைந்த முதலமைச்சர் அம்மா இருந்தபோது இதுபோன்ற ஒரு நடவடிக்கையை நீங்கள் செய்து இருப்பீர்களா?
சரி நீங்கள் செய்து விட்டீர்கள்.. இப்போது நான் கேள்வி கேட்கிறேன்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இவர்களுடைய ஒப்புதலை பெற்றுதான் இந்த சந்திப்பு நடந்ததா?
இந்த கட்சியில் அம்மா இருக்கும்போது இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்குமா? ஒரு ஒப்புதல் கூட பெறாமல் சென்ற நீங்கள்.. அதிமுக கரை வேட்டியையாவது கட்டி சென்றீர்களா? பேண்ட், சர்ட் போட்டு சென்று உள்ளீர்கள். அப்போது நீங்கள் கட்சியை முன் நிறுத்தவில்லை. உங்களைத்தான் முன்னிறுத்தி உள்ளீர்கள்.
இப்படி ஒரு நிலைமையில் அதிமுக செல்வது நல்லதல்ல. இதுவே ஒரு சின்ன எடுத்துக்காட்டு. கழகம் ஒற்றைத் தலைமையில் தான் இயங்க வேண்டும்.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அவர்களின் வழியில் அதிமுக கம்பீரமாக எடப்பாடியார் வழியில் செயல்பட வேண்டும்.
கேள்வி கேட்பதற்கு யாருமில்லை என்ற நிலை மாறவேண்டும். ஒட்டுமொத்த தொண்டர்களும் பல சந்தர்ப்பங்களில், பல சூழ்நிலைகளில் இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களின் மனதில் குமுறல் உள்ளது.
எனவே பொதுச்செயலாளராக எடப்பாடியார் தலைமை ஏற்பார். கழகம் இனி வெற்றி நடை போடும். தொண்டர்களின் ஆட்சி நடைபெறும். தொண்டர்களின் கழகமாக அதிமுக மாறப்போகிறது என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்" என்று தெரிவித்துள்ளார்.