ஓபிஎஸ்-ன் B டீமா திமுக? அந்த 100 ஏக்கர் நிலம்... ஆதாரம்! அதிரவைக்கும் டிவிட்! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மீதான சொத்து குறிப்பு வழக்கை திரும்ப பெற அனுமதித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், சொத்து குவிப்பு வழக்கு ஆவணங்களை மதுரை எம்.பி - எம்.எல்.ஏ,க்கள் வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்திற்கு 4 வாரங்களில் மாற்றவும், வழக்கை இழுக்கடைக்க முயன்றதால், ஜாமினை மதுரை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்யலாம் என்றும், தினந்தோறும் வழக்கை விசாரணை செய்து 2025 ஜூன் மாதத்திற்குள் முடிக்கவும்  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த செய்தியை பகிர்ந்து அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் 100 ஏக்கருக்கும் மேல் நிலங்களை வாங்கி குவித்த ஆதாரங்களை அறப்போர் புகாராக கொடுத்துள்ளது. 

ஆனால் திமுக அரசு இது வரை FIR கூட பதியாமல் பன்னீர்செல்வம் அவர்களை காப்பாற்றி வருகிறது. பழைய வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அறப்போர் கொடுத்த புகாரை எப்பொழுது விசாரிப்பார்கள் என்று OPSன் B டீமாக செயல்படும் திமுக அரசு தான் சொல்லவேண்டும்" என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS B Team DMK arappor iyakkam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->