சொத்து குறிப்பு வழக்கில் வசமாக சிக்கினார் ஓபிஎஸ்! நாள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மீதான சொத்து குறிப்பு வழக்கை திரும்ப பெற அனுமதித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், சொத்து குவிப்பு வழக்கு ஆவணங்களை மதுரை எம்.பி - எம்.எல்.ஏ,க்கள் வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்திற்கு 4 வாரங்களில் மாற்றவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சொத்துக்கு வழக்கை இழுக்கடைக்க முயன்றதால், ஜாமினை மதுரை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்யலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நாள்தோறும் விசாரணை நடத்தி, வருகின்ற 2025 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓ பன்னீர்செல்வத்தின் மீதான சொத்து வழக்கை பொறுத்தவரை, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் குவித்ததாக, ஓ பன்னீர்செல்வம் மற்றும் சிலரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை திரும்ப பெற அனுமதித்ததை எதிர்த்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை நடத்திய நிலையில், தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS case chennai hc order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->