இபிஎஸ்-ஐ விடாமல் துரத்தும் ஓபிஎஸ்.! பறந்த கடிதம், கலக்கத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கட்சிக்கு விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி ஓ பன்னீர்செல்வம், அவரது இரு மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். 

இதை தொடர்ந்து, தன்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என கூறி, எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களை ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து, கட்சியின் பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த 17ஆம் தேதி நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்து, அப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், ஓ பன்னீர்செல்வம் மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் பற்றிய தகவல்களை குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் நியமனம் குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS letter election commission for new members


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->