டெல்லி : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு உடன் சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு உடன் சந்தித்து பேசினார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 

இதில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று மதியம் பிரதமர் மோடி முன்னிலையில்  வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

அப்போது மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர். குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டெல்லியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உடன் குடியசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு சந்தித்து பேசியுள்ளனர். அப்போது குடியசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS meet president candidate Draupadi Murmu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->