#BigBreaking || சசிகலாவை சந்திக்கிறாரா ஓபிஎஸ்... சற்றுமுன் ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி பேட்டி.!
ops meet sasikala for admk eps issue
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மற்றபடி அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு ஒன்றை அளித்த மனுவை ஏற்றுக்கொண்டு, அடுத்த மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, எடப்பாடி கே பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், "நேற்றோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. தற்போது, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டுமே. அதேபோல், முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர்.
பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை கூட்டலாம்" என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம், "நீதிமன்றம், தேர்தல் ஆணையம் சந்திக்கும் திட்டம் இல்லை. இன்னும் மொன்றநாள் கழித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் "சசிகலாவை ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பு உள்ளதா?" என்று கேள்வி எழுதிப்பானார். இதற்க்கு பதிலளித்த வைத்தியலிங்கம், "ஓபிஎஸ் சசிகலாவை சந்திப்பாரா? என்பது போன்ற கேள்விகளெல்லாம் எல்லாம் இப்போது தேவை இல்லை" என்று பதிலளித்தார்.
English Summary
ops meet sasikala for admk eps issue