வெளியான மரணச் செய்தி.. துயரத்திலும், மிகுந்த வேதனையிலும் ஓபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


கல்வி மற்றும் சமூகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவருமான முனைவர் திருமதி. உமையாள் ராமநாதன் அவர்கள் திடீரென உயிரிழந்தார் என்ற செய்தியினை கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியத்‌ தொழிலதிபரும்‌, தலைசிறந்த கல்வியாளரும்‌, கொடை வள்ளலுமான மறைந்த முனைவர்‌ ஆர்‌.எம்‌, அழகப்ப செட்டியார்‌ அவர்களின்‌ புதல்வியும்‌, காரைக்குடியிலுள்ள அழகப்பா மேல்நிலைப்‌ பள்ளி மற்றும்‌ டாக்டர்‌ உமையாள்‌ ராமநாதன்‌ மகளிர்‌ கல்லூரியின்‌ நிறுவனரும்‌, அழகப்பா பல்கலைக்கழகத்தின்‌ சிண்டிகேட்‌ உறுப்பினரும்‌, கல்வி மற்றும்‌ சமூகப்‌ பணிகளில்‌ மிகுந்த ஈடுபாடு கொண்டவருமான முனைவர்‌ திருமதி உமையாள்‌ ராமநாதன்‌ அவர்கள்‌ திடீரென உயிரிழந்தார்‌ என்ற செய்தியினை கேட்டு ஆற்றொணாத்‌ துயரமும்‌, மிகுந்த மன வேதனையும்‌ அடைந்தேன்‌. பெண்களின்‌ முன்னேற்றத்திற்காக இவர்‌ ஆற்றிய பணிகள்‌ போற்றத்தக்கது. இவருடைய இடத்தை இனி யாராலும்‌ நிரப்ப முடியாது.

முனைவர்‌ திருமதி உமையாள்‌ ராமநாதன்‌ அவர்களை இழந்து வருந்தும்‌ அவரது குடும்பத்தினருக்கும்‌, அப்பகுதி மக்களுக்கும்‌ என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தினையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. அன்னாரது ஆன்மா இறைவனின்‌ திருவடி நிழலில்‌ இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops mourns the death of umayal ramanathan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->