திடீர் திருப்பம்.. சற்று நேரத்தில் தீர்ப்பு.. ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். 

கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி (இன்று) நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது. இதனுடைய அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. இன்று காலை 9.15 மணிக்கு திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக தெரிவித்துள்ளனர்.  

இந்த பரபரப்பான சூழ்நிலைகள் ஓ பன்னீர்செல்வத்தின் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் தனது ஆதரவாளர்களை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார். 

இந்நிலையில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஓ பன்னீர்செல்வம். 9.15 மணிக்கு பொதுக்குழு கூடும் நிலையில், அதிமுக அலுவலகம் செல்கிறார் ஓ பன்னீர்செல்வம்.  ஆதரவாளர்களுடன் ஆலோசித்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் தலைமை அலுவலகம் புறப்பட்டார். அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops new plan on july 11


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->