தனது இறுதி அஸ்திரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்.. வசமாக சிக்க போகும் இபிஎஸ்.?
OPS New Sketch To EPS
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.
கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் நியமிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை அவமதிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு நடந்து கொண்டனர். ஓபிஎஸ் மேடையில் அமர்ந்திருக்கும் போது அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவான பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். பொதுக்குழு ஒரு தலைப்பட்சமாக நடைபெறுவதாக கூறி ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் பொதுக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். மேலும், கட்சி தலைமையை தக்க வைத்துக் கொள்ளவும், கட்சியில் தன் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கிலும் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக கொங்கு மண்டலத்திற்கு செல்ல ஓ.பி.எஸ் செல்ல திட்டமிட்டுள்ளார். கொங்கு மண்டலத்தை எடப்பாடி பழனிசாமி, அவரது ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் தங்களின் கோட்டை என கூறி வருகின்றனர். இதை உடைக்கும் வகையில், கொங்கு மண்டலத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த மாவட்டங்களில் ஆதரவாளர்கள் பட்டியலை ஓ பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத், வைத்திலிங்கம், கோவை செல்வராஜ் ஆகியோர் தயாரித்து, அதில் இடம் பெற்றவர்களிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களால் ஓரம் கட்டப்படும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகள் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னால் எம்பிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.