முன்னாள் அமைச்சரின் மகள் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
Ex ministers daughter commits suicide by jumping from second floor
அசாமின் கவுகாத்தியில் முன்னாள் அமைச்சரின் மகள் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசோம் கண பரிசத் கட்சியின் முதல் ஆட்சியின்போது அசாமில் உள்துறை மந்திரியாக பதவி வகித்துவந்தவர் பிரிகு குமார் புகான். இவர் கடந்த 2006-ம் ஆண்டு மரணமடைந்தார்.இவருக்கு 28 வயதில் உபாசா புகான் என்ற மகள் உள்ளார்.
உபாசா புகான் அசாமின் கவுகாத்தி நகரின் கார்குலி பகுதியில் தன்னுடைய தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 2-வது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அப்போது அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக கவுகாத்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து நடந்த முதல்கட்ட விசாரணையில், உபாசா நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என தகவல் தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இதற்கு முன்பும் அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
உபாசா தற்கொலை செய்த போது அவருடைய தாயார் வீட்டு வேலையில் பரபரப்பாக இருந்ததும் தெரியவந்துள்ளதாக என போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் வீட்டில் இருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
Ex ministers daughter commits suicide by jumping from second floor