தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு, புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தும்.. ஓபிஎஸ் கேள்வி.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்துகொண்டு நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததையடுத்து, தேனி மாவட்டத்திற்கு செல்ல சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவரிடம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்த நிலையில், அதிலிருந்து திமுக நழுவிக் கொண்டது. 

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து திமுகவிடம் தான் கருத்து கேட்க வேண்டும். மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக நடைமுறைப்படுத்துமா என்ற கேள்விக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு, புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப் போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops press meet about dmk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->