2025 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்; பிப்ரவரி 01 தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


​ 2025க்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01ஆம் தேதி தாக்கல் செய்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி.13ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. 

மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசின் ஆட்சியில் 03வது முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தொடர்பாக தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினருடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மாதம் ஆலோசனை நடத்தி அவர்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார்.

இந்த முறை பட்ஜெட்டில் வரிமுறையை எளிமைப்படுத்துதல், முதலீடு மற்றும் அதனை சார்ந்த வளர்ச்சி குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், வழக்கமாக சனி மற்றும் ஞாயிறுகளில் பங்குச் சந்தைகள் விடுமுறை. அனால் இந்த முறை பிப்ரவரி.01ஆம் தேதி விடுமுறை நாளான சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆகையால் அன்றைய தினம் பங்குச் சந்தைகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Finance Minister Nirmala Sitharaman will present the Union Budget on February 1


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->