குடியரசு தின நன்னாளில் அனைவரும் வாழ்வில் வளமும், நலமும் பெற எனது நல்வாழ்த்து.. ஓ.பி.எஸ்.!!
ops republic day greetings
மக்களாட்சி முறைக்கு வழிவகுத்த குடியரசு நாளன்று இந்திய விடுதலைக்காக பாடுபட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களின் தியாகத்திற்கும், அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற நாட்டுச் சேவைக்கும் எனது வீரவணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய நாடு சுதந்தீரம் அடைவதற்கு பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, “முழு விடுதலை' என்ற அறைகூவலை நினைவுகூர மகாத்மா காந்தியடிகளால் 1930ஆம் ஆண்டு தேர்ந்தைடுக்கப்பட்ட ஜனவரி 26-ஆம் நாளை இந்திய அரசமைப்புச் சட்டம் செயலாக்கத்தீற்கு வந்த நாளாக நடைமுறைப்படுத்த முடிவு செய்து 1950 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் இந்தியா முழுவதும் குடியரசு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்களாட்சி முறைக்கு வழிவகுத்த குடியரசு நாளன்று இந்திய விடுதலைக்காக பாடுபட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களின் தியாகத்திற்கும் அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற நாட்டுச் சேவைக்கும் எனது வீரவணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் அனைவரும் வாழ்வில் வளமும், நலமும் பெற எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் ககாள்வதோடு, அனைவரும் உழைத்துப் பாரதம் பாரினில் சிறக்கப் பாடுபடுவோம் என உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.
English Summary
ops republic day greetings