மௌனம் கலைக்கும் ஓபிஎஸ் தரப்பு - இன்னும் சற்று நேரத்தில் நடக்க போகும் செய்தியாளர் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


இரண்டு நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், சசிகலா, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட நான்கு பேர் குற்றவாளிகளாக கருதி, நான்கு பேரையும் விசாரணை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இது மட்டுமில்லாமல் அந்த ஆணைய அறிக்கையில் பல்வேறு திடுக்கப்படும் தகவல்கள் வெளியாகி, தமிழக அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணைய அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை குறித்து அண்மையில் எம்எல்ஏ பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "விசாரணை அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால் கேள்வி கேளுங்கள். நான் பதில் அளிக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், எம்எல்ஏ ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கோவை செல்வராஜ் இன்று காலை 10:30 மணிக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணைய அறிக்கை மற்றும் முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் மரணம் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்கள் தலைமையிலான ஆணைய அறிக்கை சம்பந்தமாக விளக்கமளிக்க உள்ளதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் தரப்பில் இருந்து இரண்டு ஆணைய அறிக்கை குறித்தும் முதல் முறையாக விளக்கம் அளிக்கப்பட இருப்பதால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் வாக்குமூலத்தில் ஓ பன்னீர்செல்வம் குறித்த சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் கோவை செல்வராஜ் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS side Kovai Selvaraj press meet sat oct


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->