அதிமுகவில் இரு பதவிகளும் காலியானால், பொதுக்குழுவை யார் கூட்டலாம்? நீதிபதியின் கிடுக்குப்புடி கேள்விக்கு ஓபிஎஸ் தரப்பு அளித்த பதில்.! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

முதல் கட்டமாக ஓபிஎஸ் தரப்பு வாதமும், முன்னாள் பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்துவின் வாதமும் முன்வைக்கப்பட்டது.

அப்போது, அதிமுகவில் இரு பதவிகளும் காலியாக உள்ள நிலையில் பொதுக்குழுவை யார் கூட்டலாம்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு, கட்சி விதிகளின் படி தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம் என்று ஓபிஎஸ் தரப்பு பதிலளித்தது.

தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானால், பொருளாளர், தலைமை கழக செயலாளர் அந்த பதவிகளுக்கான பணிகளை மேற்கொள்வர் என்றும் ஓபிஎஸ் தரப்பு பதிலளித்தது.

மேலும், தேர்தல் விதி திருத்தத்துக்கு, பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என்றால், அது பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்றும் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops side say about admk general meet


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->