ராஜினாமா, இடைத்தேர்தல் - அடுத்த கட்டத்தை நோக்கி ஓபிஎஸ் தரப்பு.! - Seithipunal
Seithipunal


ஓ பன்னீர்செல்வத்தால் நியமனம் செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று ஓபிஎஸ்-யை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதற்கு பின்னர்  செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அவர்கள் தெரிவிக்கையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களும் பதவி விலகி, இடைத்தேர்தலில் சந்தித்தால் கட்சியும், சின்னமும் யார் யார் கையில் இருக்கிறது என்பது தெரியவரும் என்று தெரிவித்தனர்.

மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், "வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரை ஓ பன்னீர்செல்வம் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். இதுதான் சட்டப்படி செல்லும்.

இன்றைக்கு எடப்பாடி அவர்கள் தொண்டர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளார். எடப்பாடியாரிடம் தான் கட்சியும், சின்னமும் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை நீக்க வேண்டிய கடமை அவரிடம் இருக்கிறது.

எனவே, எடப்பாடியாரோ அல்லது கேபி முனுசாமியோ, இல்லை 63 எம்எல்ஏக்கள் யாரேனும் ஒருவர் ராஜினாமா செய்யட்டும். உடனடியாக உடனடியாக இடைத்தேர்தல் வரும். அந்த இடைத்தேர்தலில் கட்சி யார் கையில் இருக்கிறது? சின்னம் யார் கையில் இருக்கிறது? என்பது தெரியவரும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops side shoking update for admk eps


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->