அதிமுகவில் இணையும் முன்னாள் அமைச்சர்! அதிர்ச்சியில் ஓபிஎஸ்! தட்டி தூக்கும் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர், அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

சசிகலா, டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும் அதிமுகவின் தலைமை பதவியை பகிர்ந்து கொண்டிருந்தனர். 

இதில் ஓ பன்னீர்செல்வம் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து, பொதுக்குழுவை கூட்டி ஓப் பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தனர்.

இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், வெல்லமடி நடராஜன் உள்ளிட்டவர்கள் 'அதிமுக உரிமை மீட்பு குழு'வை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர். 

இதற்கிடையே நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டது, அவரின் ஆதரவாளர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிய வருகிறது. 

அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் விலகினார். அவரைத் தொடர்ந்து தற்போது ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக விரைவில் இணைய உள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS side Vellamandi Nadajan may be joint to AIADMK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->