#Breaking :: இது பொறம்போக்கு நோட்டீஸ்.. அதிமுகவின் பட்டா ஓ.பி.எஸ் பெயரில்..!! பெங்களூர் புகழேந்தி விளாசல்..!! - Seithipunal
Seithipunal


ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளதால் அதிமுக கட்சியின் பெயர், கோடியை பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பதிலடி தந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் "ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பியது சிரிப்பிற்குரிய விஷயம். இத்தனை நாட்களில் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லையா..? நேற்றைக்குக் கூடிய கூட்டத்தை பார்த்து இ.பி.எஸ் அணியினர் ஏன் மிரள வேண்டும். ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தை அறிவித்தவுடன் பதற்றத்தில் டிச.27ம் தேதி இ.பி.எஸ் அணியினரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்

இ.பி.எஸ் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவ்வாறு இருக்கும் பொழுது யாரை கேட்டு இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எடுத்த முடிவா, ஜெயக்குமார் எடுத்த முடிவா என தெரியாது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது எந்த வித கூட்டத்தையும் கூட்ட மாட்டோம், முடிவு எடுக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். 

இதற்கிடையே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அதிமுகவை பொருத்தவரை அடிப்படை உறுப்பினர்கள் இணைந்து தான் அதிமுக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் யாரும் இருக்க கூடாது என்பதுதான் எங்களின் நிலைபாடு. இதற்கிடையே நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தை பார்த்து பயந்து இ.பி.எஸ் அணியினர் பதற்றத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது. அதிமுக எனும் கட்சியின் பட்டா ஓ.பி.எஸ் பெயரில் உள்ளது. ஆகவே பட்டா இல்லாத புறம்போக்கு நோட்டீஸ்க்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" காட்மாக என பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS team Pugazhendi replying AIADMK lawyer notice


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->