தீய சக்தி திமுக | தஞ்சை திருமண விழாவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


"தீய சக்தியான திமுகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற ஒருங்கிணைந்து செயல்படுவோம்" எனக் தஞ்சாவூரில் நடந்த எம்எல்ஏ இல்ல திருமண விழாவில் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான ஆர்.வைத்திலிங்கம் இல்லத் திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பேசியதாவது: நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்றார்.ஒரு குடும்பத்தில் இரு பிள்ளைகளுக்கு இடையே சண்டைகள் இருந்தாலும் இங்கு நாம் எல்லாம் ஒன்று கூடி இருக்கின்றோம் என்றால் வைத்தியலிங்கத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.

எம்ஜிஆருக்கு பிடித்த நம்பரான 7 ஆம் தேதி உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.இன்றைய அரசியல் சூழ்நிலையில் அதிமுகவில் உள்ள தற்காலிக நிலைகள் மற்றும் மனக்கசப்புகள் இவைகளை எல்லாம் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்ற சூழலாக மாற்றிக்கொள்ள பலர் முயற்சித்து வருவதாக கூறினார்.

அனைவருக்கும் நிறைவான எண்ணத்தை உருவாக்கும் வகையில் தான் இந்த இயக்கத்தை தலைவர் எம்ஜிஆர் தொடங்கி வைத்தார். யார் எப்படி சூழ்ச்சிகள் செய்தாலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் இயக்கத்தை வழிநடத்த வேண்டும். செல்லும் இடங்களில் பலர் இயக்கத்தை நீங்கள் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என தெரிவிப்பதாக கூறினார்.

எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை தஞ்சை மண்ணில் இருந்தே ஆரம்பித்தால் வெற்றியாக தான் முடியும். அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு ஜெயலலிதாவின் வெற்றி காலங்களை நினைவு கூற வேண்டும்.அதற்கான பிள்ளையார் சுழித்தான் இங்கே போடப்பட்டுள்ளது.அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தினகரன் இந்த விழாவில் கலந்து கொண்டு இருப்பது மன மகிழ்ச்சியையும் தைரியத்தையும் தருகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அதிமுகவை எதிர்த்து வெற்றி பெற இங்கு யாருக்கும் தகுதி இல்லை.

ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்களை தனித்துப் போட்டியிட செய்து வெற்றியடைய செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS TTV Dhinakaran Both Has Attended Same Wedding Ceremony


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->